உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / மயிலாடுதுறையில் திடீர் மழை நெல் மூட்டைகள் நனைந்து நாசம்

மயிலாடுதுறையில் திடீர் மழை நெல் மூட்டைகள் நனைந்து நாசம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பெய்த திடீர் மழையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்பட்டன.மயிலாடுதுறை மாவட்டத்தில், 1.60 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடந்து வருகிறது. நெல் கொள்முதல் செய்ய, 170 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில், 93 திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில், 18,000 டன் நெல் மூட்டைகள் தேக்கம்அடைந்திருந்தன.டெல்டா மாவட்டங்களில் பிப்., 27 முதல் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மிதமான மழை பெய்தது. தரங்கம்பாடியில் அதிகளவு மழை பெய்த நிலையில், திருக்களாச்சேரி திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர்.தில்லையாடி நெல் கொள்முதல் நிலையத்தில் முன்கூட்டியே மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடாமல், மழை பெய்த பின்னர் மூடியதால் நெல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மழையில் நனைந்த நெல்லை ஈரப்பதம் உள்ளிட்ட எவ்வித கட்டுப்பாடுமின்றி கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி