உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / வீட்டின் கதவை உடைத்து 125 சவரன் நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 125 சவரன் நகை கொள்ளை

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மங்கைமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வேந்திரன், 62; தனியார் சர்க்கரை ஆலை தலைமை இயக்குனர். இவரது மகன் வெங்கடேஷ் வெளிநாட்டில் உள்ளார். வீட்டில் செல்வேந்திரன், அவரது மனைவி ஹேமலட்சுமி, மருமகள் மகேஸ்வரி உள்ளனர். செல்வேந்திரன் மகள் அமிர்தவர்ஷணியை, பிரசவத்திற்காக மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி சேர்த்தனர். அவருக்கு துணையாக செல்வேந்திரன், அவரது மனைவி, மருமகள் மூவரும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர்.குழந்தை பிறந்ததும், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மகேஸ்வரியின் அறையில் இருந்த பீரோக்கள் உடைந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 125 சவரன் நகை, 80,000 ரூபாய் கொள்ளை போயிருந்தது.சீர்காழி டி.எஸ்.பி., ராஜ்குமார் மற்றும் திருவெண்காடு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜன 26, 2025 06:19

தொடர்ச்சியாக இந்த பகுதியில் கதவு உடைப்பு நடந்து கொண்டே இருக்கு ஆனாலும் நடவடிக்கை ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை