மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இருவர் பலி
14-Oct-2024
மயிலாடுதுறை:சீர்காழி அருகே பைக் மீது கார் மோதியதில் இருவர் இறந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அண்டக்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ்,55; இவர் தனது மகள் திருமணத்திற்கு பத்தரிக்கை வைக்க உறவினர் தட்சிணாமூர்த்தி,௬௦; என்பவருடன் தனது பைக்கில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கோவில்பத்து கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு பத்திரிக்கை வைத்துவிட்டு மீண்டும் பைக்கில் ஊருக்கு புறப்பட்டனர். சீர்காழி பைபாஸ் சாலை அருகே வந்தபோது எதிரே திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நாகை நோக்கி சென்ற இண்டிகா கார் மோதியது.அதில் பைக் ஓட்டி வந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆபத்தான நிலையில் இருந்த தட்சிணாமூர்த்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிந்த, விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நெசல் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார்.32; என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
14-Oct-2024