உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி- 7 பேர் படுகாயம்

கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி- 7 பேர் படுகாயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். 7 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ஹரி ரோகித். வைத்தீஸ்வரன்கோவில் வேலவன் நகரில் உள்ள நண்பர் ராகுல்(18) வீட்டிற்கு மாருதி சுசுகி எர்டிகா காரில், 8 நண்பர்களுடன் சென்றார். 8 பேரும் தரங்கம்பாடி சுற்றுலா தளத்திற்கு சென்று விட்டு வைத்தீஸ்வரன்கோவிலுக்கு திரும்பியுள்ளனர். காரை ராகுல் ஓட்டியுள்ளார். பூந்தாழை நான்கு வழி சாலையில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் ஹரி ரோஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்த மக்கள் கவிழ்ந்த காரை புரட்டி காயங்களுடன் சிக்கி இருந்த 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செம்பனார் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை