தருமபுரம் ஆதீனத்தில் குருபூஜை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 25வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆண்டு குருபூஜை விழா இன்று (நவ.,2) நடந்தது. அதனை முன்னிட்டு ஆனந்த பரவச பூங்காவில் உள்ள கயிலை குருமணிகள் குருமூர்த்தத்திற்கு 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மாசாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து மாகேஸ்வர பூஜை நடந்தது. குருமூர்த்தத்தில் திருமுறை பாராயணம், சொற்பொழிவுகள் நடந்தன. ஆதீன தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.