உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / ஹெல்த் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி

ஹெல்த் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி

மயிலாடுதுறை:சாலை விபத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் இறந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் கஸ்துாரிபாய் நகரை சேர்ந்தவர் புரட்சிமணி மகன் அன்புராஜ்,40; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த உள்ள திருமுல்லைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு நேற்று காலை தனது பைக்கில் வைத்தீஸ்வரன்கோவில் வழியாக வீட்டிற்கு புறப்பட்டார். உடையாம்பள்ளம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த பைக் மோதியது. படுகாயமடைந்த அன்புராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். விபத்தில் இறந்த அன்புராஜுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை