திருமண சர்ச்சை மதுரை ஆதீனம் கருத்து
மயிலாடுதுறை,:மயிலாடுதுறை அடுத்த சின்ன நாகங்குடியில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம், 293வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:தம்பிரான்கள் ஆதீனத்திற்கு கட்டுப்பட்டவர்கள். நான் தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக இருந்தேன். கட்டுப்பாட்டை மீறாமல்தான் நடந்தேன். ஆதீனங்களுக்கான விதிமுறைகளை வகுப்பது ஆதீனகர்த்தர்கள் தான். அவர்கள் எந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனரோ, அவர்களே தீர்வு சொல்வர். ஒரு மடத்தை பற்றி இன்னொரு மடத்தின் தலைவர் கருத்து சொல்லக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.