உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் /  வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

 வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு கூட்டு பாடல் திருப்பலியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழ்திசை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும், ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விண்மின் தேவாலயத்தில்,சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 11 30 மணிக்கு துவங்கிய சிறப்பு பாடல் திருப்பலி, நேற்று அதிகாலை 1.30 மணி வரை நடந்தது. தேவாலய அதிபர் இருதயராஜ், பங்கு பாதிரியார் அற்புதராஜ் தலைமையில், 25க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலியில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு, நற்கருணை ஆசீர், உலக மக்களின் அமைதிக்கான சிறப்பு ஜெபம், பிரார்த்தனை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ