மேலும் செய்திகள்
ஸ்டாலின் - பழனிசாமி வருகை ஓங்கப்போவது யார் 'கை?'
05-Aug-2025
நாகப்பட்டினம்:நாகை மாவட்டத்தில், காவிரி கடைமடை பகுதிகளில் நேரடி விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள், விதைநெல் முளைப்புத் திறன் குறைவால், கூடுதல் செலவு செய்து, தனியாரிடம் நாற்றுகள் வாங்கி, நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரியின் கடைமடை யான நாகை மாவட்டத்தில் , வெண்ணாறு வடிநிலக்கோட்டத்தில், வெட்டாறு பாசனத்தில், 50,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து வருகிறது. பாலையூர் பகுதியில் குறுவை சாகுபடிக்காக, 110 நாள் பயிரான, 'கோ-59' என்ற விதை நெல் மூலம் நேரடி விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டனர். 'முளைப்புத் திறன் இல்லாததால், கவலையடைந்த விவசாயிகள், தஞ்சாவூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் இருந்து கோ-59 நெல் நாற்றுக்களை வாங்கி வந்து நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலர் தமிழ்செல்வன் கூறுகையில், ''மிகுந்த எதிர்பார்ப்போடு, 1 ஏக்கருக்கு ஒரு மூட்டை விதை நெல் 1,500 ரூபாய்க்கு வாங்கி, நேரடி விதைப்பில் ஈடுபட்டோம். ''உப்பு தண்ணீர் உட்புகுந்ததா, வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை. நெல் விதைகள் முளைக்கவில்லை. ''வேளாண் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித வழிகாட்டலும் இல்லை. விதைநெல் முளைப்புத் திறன் இல்லாததால், தனியாரிடம், 3,000 ரூபாய்க்கு நாற்றுக்களை வாங்கி, சாகுபடியை துவக்கியுள்ளோம். ''அரசு சிறப்பு நிதி ஒதுக்கி வெங்காய தாமரையை அகற்றினால் மட்டுமே வெள்ள காலத்தில் குறுவையை பாதுகாக்க முடியும்,'' என்றார்.
05-Aug-2025