மேலும் செய்திகள்
பாகூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய தேர்பவனி
24-Aug-2025
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் சப்பர பவனியின் போது, பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா சர்ச் ஆண்டு திருவிழா, ஆக., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் பகல், 12:00 மணிக்கு கொடியேற்றம் மற்றும் இரவில் சப்பர பவனி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சப்பர பவனி நடந்தது. அப்போது, பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பறந்து, 40 அடி உயர கண்காணிப்பு கோபுர கூரையில் விழுந்தது. இதில், கோபுர கூரையில் அமைக்கப்பட்டிருந்த கீற்றுகள் தீப்பிடித்து சாம்பலானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
24-Aug-2025