உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / 10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்; தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்

10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்; தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம்; நாகையில், 10ம் வகுப்பு தேர்வில், தாய்க்கு பதிலாக, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மகளை, தேர்வு கண்காணிப்பாளர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த 28ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தேர்வு நாகை மாவட்டத்தில் 42 மையங்களில் நடக்கிறது. பள்ளி மாணவர்களுடன், தனித்தேர்வர்களும் இத்தேர்வை எழுதி வருகின்றனர்.நேற்று நாகை, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வு துவங்கியது. தேர்வு அறை கண்காணிப்பாளர், வினாத்தாள் மற்றும் தேர்வு எழுதுவதற்கான தாள்களை, தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்து, கையெழுத்து வாங்கினார்.அப்போது ஒரு மாணவி முகம் கவசம் அணிந்து இருந்ததால், சந்தேகமடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர் முக கவசத்தை அகற்றும்படி கூறியுள்ளார்.நுழைவு சீட்டை சோதனை செய்ததில், வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு நபர் புகைப்படம் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, மாணவியை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.விசாரணையில், வெளிப்பாளையத்தை சேர்ந்த செல்வாம்பிகை,25, என்பதும் தனது தாய் சுகந்திக்காக ஆள் மாறாட்டம் செய்து, தேர்வு எழுத வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண்ணை, வெளிப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

naranam
ஏப் 03, 2025 14:05

என்ன ஒரு தெனாவட்டு?


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 03, 2025 11:56

ரொம்பத் தோண்டித் துருவி ஆராய்ச்சி பண்ணினா, ஆள் மாறாட்டம் செஞ்ச பொண்ணுக்குப் பின்னாடி வட்டம் மாவட்டம் எதுனாச்சும் இருக்கும். நீ போம்மா, நாங்க பார்த்துக்கறோம், கலெக்டரா இருந்தா என்ன எஸ் பி யா இருந்தா என்ன நாங்க சொல்றதைத்தான் கேக்கணும்னு சொல்லலியா ?


Natchimuthu Chithiraisamy
ஏப் 03, 2025 11:33

இங்கு சட்டம் கடுமையானது


ஆரூர் ரங்
ஏப் 03, 2025 11:14

பர்தா போட்டிருந்தால் இப்படி சோதனை செய்யும் தைரியம் வந்திருக்குமா? ஆள்மாறாட்டம் கொடிய குற்றம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 03, 2025 09:48

தாய்க்குப் பதிலாக மகள்.... ஈவேரா கொள்கை எவ்வளவு சரின்னு சங்கிகளுக்கு இப்பப் புரிஞ்சிருக்கணுமே ?? ஊ பீ யி ஸ் பெருமிதம் ......


R S BALA
ஏப் 03, 2025 09:23

என்ன ஒரு புத்திசாலித்தனம்..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 03, 2025 09:46

இல்ல... என்ன ஒரு வில்லத்தனம்..


Padmasridharan
ஏப் 03, 2025 07:06

பெண் அதிகாரம், பெண் கல்வி, பெண் சுதந்திரம்... இன்னும். என்னென்ன.. இந்திய பொருளாதாரத்தை உயர்த்த குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் பெண் குற்றவாளிகளும் அதிகமாகி இருக்கின்றது.


தத்வமசி
ஏப் 03, 2025 06:45

அடப்பாவமே... தாயே எழுதி இருக்கலாம். குறைந்த அளவில் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பார். வாழ்க்கையே வீணானது.


PR Makudeswaran
ஏப் 03, 2025 10:05

வினாச காலே விபரீத புத்தி. கலி யுகம் இல்லை கழக யுகம்.


சமீபத்திய செய்தி