மேலும் செய்திகள்
கோயில்களில் கும்பாபிஷேகம்
05-Sep-2025
நாகப்பட்டினம்:நாகை அடுத்த வேளாங்கண்ணியில் பழமையான ரஜத கிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், 16 வகையான பூஜை பொருட்களை, முஸ்லிம்கள் சீர்வரிசையாக எடுத்து வந்து பங்கேற்றனர். நாகை அடுத்த வேளாங்கண்ணியில், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பிரஹந்நாயகி உடனுறை ரஜத கிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின், கடந்த 9ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று, யாகசாலை பூஜைகளுக்கு பின் கடம் புறப்பாடாகி, ரஜத நீலகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, வேளாங்கண்ணி முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள், அம்மனுக்கு பட்டுப்புடவை மற்றும் பூஜைகளுக்கு தேவையான 16 வகையான மங்களப் பொருட்களை சீர்வரிசையாக, ஊர்வலமாக எடுத்து வந்து பங்கேற்றனர். மேலும், ஆரோக்கியமாதா தேவாலய அதிபர் இருதயராஜ் தலைமையிலான பாதிரியார்கள், முஸ்லிம் ஆண்கள், பெண்கள் என திராளானவர்கள் பங்கேற்றது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
05-Sep-2025