உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / அரட்டை செயலியில் புதிய அப்டேட்: ஸ்ரீதர் வேம்பு

அரட்டை செயலியில் புதிய அப்டேட்: ஸ்ரீதர் வேம்பு

நாகப்பட்டினம்: ''சுதேசி சமூக வலைதளமான, 'அரட்டை' செயலியில், அடுத்த வாரத்தில் புதிய, 'அப்டேட்' செய்யப்படவுள்ளது,'' என, ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். நாகை மாவட்டம், சிராங்குடி புலியூரில், 12 ஏக்கர் பரப்பளவில், 30 கோடி ரூபாய் செலவில், ஜோகோ நிறுவனம் சார்பில் பின்னலாடை தொழிற்சாலை அமையவுள்ளது. நேற்று புதிய தொழிற்சாலைக்கு, ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில், ஸ்ரீதர் வேம்பு பேசுகையில், ''நாகையில் தொழில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற, 10க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் நாகைக்கு வரவுள்ளது. 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ' 'அரட்டை செயலி நன்றாக இயங்கி வருகிறது. அது தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்திற்குள் மேம்படுத்தப்பட்ட அப்டேட்களுடன் பயன்பாட்டிற்கு வரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

xyzabc
அக் 29, 2025 11:23

மிக்க நன்றி வேம்பு சார். இந்த வூருக்கு தி மு க, கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களால் ஒரு உபயோகமும் இல்லை. வெட்டி பேச்சு, ஸ்டிக்கர். உங்களை போன்ற நல்லவர்களால் இந்த வூருக்கு வெளிச்சம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை