மேலும் செய்திகள்
முளைப்பாரி பந்தலில் தீ விபத்து
02-Oct-2025
நாகப்பட்டினம்: நாகையில், த.வெ.க., பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், இருசக்கர வாகனம் எரிந்து சேதமானது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினத்தை சேர்ந்தவர் சக்திவேல், 35; த.வெ.க., வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய பொருளாளர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் தன் ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை இவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் பைக்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். மேலும், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில், பைக் தீயில் எரிந்து கருகியது. வீட்டின் வாசலில் தீப்பற்றியது. வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல் மற்றும் குடும்பத்தினர், அலறியடித்து கொல்லைப்புறமாக தப்பியுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து, பெட்ரோல் குண்டு வீசி தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
02-Oct-2025