பழங்கால வாழ்வியலை அறிய மாணவியர் ஆர்வம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே ஆழியூர், அரசு மேல்நிலைப்பள்ளியில், தொல்லியல் மரபு மன்றம் சார்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது.பழங்கால தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் குறித்து வருங்கால தலைமுறை அறியும் வகையில், வரலாற்று ஆவணங்கள், உள்நாடு, வெளிநாடு நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடு வடிவங்கள், கல்வெட்டு புகைப்படங்கள், தமிழர்களின் பன்னாட்டு வணிகம், தொல்லியல் அரிய புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.தொல்லியல் ஆர்வலர் ராமச்சந்திரன், தொல்லியல் மரபு ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆகியோர், பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான நாகை வரலாறு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்களின் வரலாறு, புத்த துறவிகள் வாழ்ந்ததற்கான சான்று குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.