ரயில் மோதி தொழிலாளி பலி
நாகப்பட்டினம்:நாகையில், தண்டவாளத்தை கடந்தபோது, சரக்கு ரயில் மோதி காய்கறி கடை ஊழியர் பலியானார்.நாகை அருகே பெருங்கடம்பனுரை சேர்ந்தவர் தங்கபாண்டியன், 48. இவர் புத்துார் ரவுண்டானா அருகேயுள்ள . காய்கறி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக புத்தூர் ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, காரைக்காலில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற சரக்கு ரயில் தங்கபாண்டியன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.நாகை ரயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.