உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சீசன் தொடங்க இருப்பதால் புதியமஞ்சளுக்கு வியாபாரிகள் காத்திருப்பு நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கியமான மஞ்சள் மார்க்கெட்டில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும்

சீசன் தொடங்க இருப்பதால் புதியமஞ்சளுக்கு வியாபாரிகள் காத்திருப்பு நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கியமான மஞ்சள் மார்க்கெட்டில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும்

சீசன் தொடங்க இருப்பதால் புதியமஞ்சளுக்கு வியாபாரிகள் காத்திருப்புநாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கியமான மஞ்சள் மார்க்கெட்டில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. மஞ்சள் சீசன், தை மாத இறுதியில் தொடங்கும். ஜனவரி மாதத்தில் அறுவடை தொடங்கி பிப்ரவரியில் விற்பனைக்கு வரத்தொடங்கும். தொடர்ந்து, எட்டு மாதங்கள் வரை மஞ்சள் வரத்து இருக்கும். பின், படிப்படியாக குறையத்தொடங்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய மஞ்சள் வரத்து இருக்காது. வியாபாரிகள், விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்திருக்கும் மஞ்சளை தான் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். மஞ்சள் சீசன் முடிந்ததால் வரத்து குறைந்தது. இதனால், கடந்த சில வாரங்களாக மஞ்சள் ஏலம் நடக்கவில்லை. விவசாயிகள் இருப்பு வைத்திருந்த மஞ்சளை மட்டும் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்றும் மஞ்சள் வரத்து இல்லாததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் புதிய மஞ்சள் விற்பனைக்கு வந்துவிடும் என, வியாபாரிகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால், ஒரு சில தனியார் மண்டிகளில், நேற்று புதிய மஞ்சள் ஏலத்திற்கு வந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை