மேலும் செய்திகள்
மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோவிலில் பூஜை
17-Feb-2025
முருகன் கோவில்களில் சஷ்டி பூஜைநாமக்கல்:நாமக்கல் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று மாசி மாத தேய்பிறை சஷ்டியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. இதில், நாமக்கல் - மோகனுார் சாலை, காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில், நேற்று காலை கணபதி, நவகிரக பூஜை நடந்தது. தொடர்ந்து, 12:00 மணிக்கு சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, 6:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மோகனுார், காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாமக்கல் கடைவீதி, சக்தி விநாயகர் கோவிலில், பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.* சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில், முருகனின் ஆறு முகங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், நாமக்கல், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
17-Feb-2025