உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்புபரமத்தியில் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்புபரமத்தியில் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்புபரமத்தியில் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்புப.வேலுார்,: பரமத்தியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக, பரமத்தி வக்கீல்கள், நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி, ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து பகுதிகளின் கழிவுநீரை, மாணிக்க நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள காலாவதி கல்குவாரியில் தேக்கி, சுத்தகரிப்பதற்கான பணிகள் நடந்து வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணிக்கநத்தம், கோப்பணம்பாளையம், வீரணம்பாளையம், இருக்கூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என, 2,000-க்கும் மேற்பட்டோர், கடந்த, 30ல், ப.வேலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகர், கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு தலைமையில், உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம், மாவட்ட நிர்வாகத்தால் கைவிடப்பட்டது.அதை தொடர்ந்து, பரமத்தியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்து, பரமத்தி பழைய பைபாஸ் சாலையில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கும், திருமணிமுத்தாற்றுக்கும் இடையே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்றாலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும். இதனால் விவசாயம் கேள்விக்குறியாகும் எனக்கூறி, பரமத்தி, ஓவியம்பாளையம், வெள்ளாளபாளையம், கீழக்கடை பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களுக்கு ஆதரவாக பரமத்தி வக்கீல்கள் சங்கம் சார்பில், நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இந்த பிரச்னை மேலும் பூதாகரமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி