உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போலீசார் அடித்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலைஸ்டேஷன் முன் உடலை கிடத்தி உறவினர்கள் மறியல்

போலீசார் அடித்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலைஸ்டேஷன் முன் உடலை கிடத்தி உறவினர்கள் மறியல்

போலீசார் அடித்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலைஸ்டேஷன் முன் உடலை கிடத்தி உறவினர்கள் மறியல்நாமக்கல்:'வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அடித்ததால், மனமுடைந்த வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, உடலை போலீஸ் ஸ்டேஷன் முன் கிடத்தி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அடுத்த தளிகை தட்டாரபாளையத்தை சேர்ந்த கொண்டப்பன் மகன் மணிகண்டன், 23; இவர், வேலகவுண்டம்பட்டியில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, டூவீலரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். வேலகவுண்டம்பட்டி, நல்லாயி அம்மன் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மணிகண்டன் ஓட்டிவந்த டூவீலரை நிறுத்தி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். சோதனையில், மணிகண்டன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, எர்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், மது குடித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, டூவீலரை பறிமுதல் செய்த போலீசார், நாளை (நேற்று) போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, 'மது போதையில் வாகனம் ஓட்டியதால், அபராதம் செலுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, வீட்டில் மணிகண்டன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள், நேற்று காலை, 10:00 மணிக்கு, தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை, வேலகவுண்டம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன் கிடத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, 'போலீசார் அடித்ததால் தான் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு போலீஸ் தான் காரணம். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, மணிகண்டனின் உடல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாலை மறியலால், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், மூன்று மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தற்கொலைக்கு துாண்டிய, எஸ்.ஐ., மோகன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ