உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மகளிர் கால்பந்து போட்டி கே.எஸ்.ஆர். கல்லுாரி முதலிடம்

மகளிர் கால்பந்து போட்டி கே.எஸ்.ஆர். கல்லுாரி முதலிடம்

திருச்செங்கோடு, : திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பெரியார் பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கிடையேயான மகளிர் கால்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடந்தன.நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. இதில், கே.எஸ்.ஆர். மகளிர் கல்லுாரி அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. அணியில் விளையாடிய ஏழு மாணவிகள், தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில், பெரியார் பல்கலைக் கழக அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவியரை, கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன், துணை தாளாளர் சச்சின் சீனிவாசன், நிர்வாக இயக்குனர் மோகன், தலைமை திட்ட நோக்க அதிகாரி பாலுசாமி, மகளிர் கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை