உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜல் ஜீவன் மிஷன் திட்டம்குடிநீர் தர ஆய்வு பயிற்சி

ஜல் ஜீவன் மிஷன் திட்டம்குடிநீர் தர ஆய்வு பயிற்சி

'ஜல் ஜீவன் மிஷன்' திட்டம்குடிநீர் தர ஆய்வு பயிற்சிதிருச்செங்கோடு,:திருச்செங்கோடு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில், கிராம பஞ்.,களில் உள்ள கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு பெண்களுக்கு கள பரிசோதனை, நீர் தரத்தை ஆய்வு செய்வது குறித்த பயிற்சி முகாம், ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் துவக்கி வைத்தார். சுரபி பவுண்டேசன் தொண்டு நிறுவன இயக்குனர் மகாலட்சுமி வரவேற்றார். டாக்டர்கள் மோகன்குமார், தினேஷ்குமார் ஆகியோர், நீர் மூலமாக பரவக்கூடிய நோய்கள் குறித்து விளக்கமளித்தனர். தொடர்ந்து, 'தண்ணீர் நல்ல முறையில் உள்ளதா' என கண்டுபிடிக்க, 16 வகை பயிற்சியளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி