உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசுத்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லைகூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆதங்கம்

அரசுத்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லைகூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆதங்கம்

அரசுத்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லைகூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆதங்கம்நாமக்கல்:'மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. ஆனால், மற்ற அரசுத்துறையினர், நமக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை' என, மாமன்ற கூட்டத்தில், கமிஷனர் மகேஸ்வரி கூறினார்.மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மேயர் கலாநிதி தலைமை வகித்தார்.துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:சரவணன், கவுன்சிலர்: மாநகராட்சியுடன், 12 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பணியாற்றும் பணியாளர்களுக்கு, 20 லட்சம் ரூபாய் வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு வருவாய் வந்துள்ளது என்பது குறித்து தெரியப்படுத்தவில்லை.மகேஸ்வரி, கமிஷனர்: கிராம பஞ்சாயத்துகளின் வங்கி கணக்கு, 'லாக்' செய்யப்பட்டுள்ளது. அவற்றை ரிலீஸ் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக, தொழில் வரி வசூல் செய்யப்படுகிறது. தற்போது, சொத்து வரி வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சரவணன், நந்தகுமார், கவுன்சிலர்கள்: மாநகராட்சி அலுவலகம் முன் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கமிஷனர்: நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மற்ற துறையினருக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்குகிறது. ஆனால், மற்ற அரசு துறையினர், நமக்கு ஒத்துழைக்கு அளிப்பதில்லை.சத்தியவதி, நந்தகுமார், கவுன்சிலர்கள்: எஸ்.பி.கே., நகர், பாலாஜி நகரில் தெருவிளக்கு அமைக்ககோரி கடந்த கூட்டத்தில் கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. அதேபோல், 9வது வார்டிலும், தெருவிளக்கு அமைத்து கொடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினால், கண்டுகொள்வதில்லை.இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.கூட்டத்தில், 117 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை