உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பி.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியில்நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

பி.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியில்நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

பி.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியில்நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்நாமக்கல்:பெரியார் பல்கலை, நாமக்கல் பி.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா, கடந்த, 24ல் காளிபாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மகளிர் சுய உதவிக்குழு திருமண மண்டபத்தில் நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் தலைவர் பழனி ஜி பெரியசாமி வாழ்த்தி பேசினார். கல்லுாரி முதல்வர் கலைமணி தலைமை வகித்தார். முதன்மையர் பெரியசாமி, தேர்வாணையர் சண்முகசுந்தரம், நிர்வாக துணைத்தலைவர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் கணபதி, விழாவை சிறப்பித்தார்.பெரியார் பல்கலை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ், முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர் பொன்னுசாமி, காளிபாளையம் ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, வாழ்த்துரை வழங்கினர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன், திட்ட விளக்க உரையாற்றினார். முகாமில், 200 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார். இந்த சிறப்பு முகாம், வரும், மார்ச், 2 வரை காளிபாளையம், பொன்னேரிப்பட்டி, மின்னாம்பள்ளி பகுதிகளில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை