உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வடுகம் காளியம்மன் கோவில் விழாபக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

வடுகம் காளியம்மன் கோவில் விழாபக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

வடுகம் காளியம்மன் கோவில் விழாபக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடுராசிபுரம்:ராசிபுரம் அடுத்த காளியம்மன் கோவிலில், பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.ராசிபுரம் அடுத்த வடுகம் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த, 6ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு சக்தி அழைத்தல், கிடா மற்றும் பூசாரி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கோவில் அருகே கிடா வெட்டும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை