ப.வேலுார் அருகே கோவில் திருவிழாவில் தகராறுபோலீஸ் ஜீப் மீது தாக்குதல்; 10 பேர் மீது வழக்கு
ப.வேலுார் அருகே கோவில் திருவிழாவில் தகராறுபோலீஸ் ஜீப் மீது தாக்குதல்; 10 பேர் மீது வழக்குப.வேலுார்:ப.வேலுார் அருகே, ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில், டி.எஸ்.பி., ஜீப் கண்ணாடியை அடித்து நொறுக்கிய, 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ப.வேலுார் அருகே, நன்செய்இடையாறில் அக்னி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கடந்த, 24ல் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு, 10:00 மணிக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, குன்னிபாளையத்தை சேர்ந்த சந்திரன் மகன் குருசாமி, 27, சகோதரர் சுரேஷ், 24, ஆகிய இருவர் உள்பட, 10 பேர் மது போதையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த, நன்செய் இடையாறு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார், 40, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என, அறிவுரை கூறியுள்ளார். ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள், 10 பேர், செந்தில்குமாரை கீழே தள்ளி தாக்கினர். இதில், காயமடைந்த செந்தில்குமாரை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது.அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த, டி.எஸ்.பி., சங்கீதாவின் ஜீப் மீது கற்களால் தாக்கினர். இதில், ஜீப் கண்ணாடி நொறுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். மேலும், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த தகராறு சம்பந்தமாக, 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.