உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மங்களபுரத்தில் அரசு கல்லுாரி இந்திய மாணவர் சங்கம் தீர்மானம்

மங்களபுரத்தில் அரசு கல்லுாரி இந்திய மாணவர் சங்கம் தீர்மானம்

நாமகிரிப்பேட்டை: இந்திய மாணவர் சங்கம், நாமகிரிப்பேட்டை ஒன்றிய, 4-வது மாநாடு, நாமகிரிப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.இதில், மங்களபுரத்தில் அரசு கலை கல்லுாரி துவங்க வேண்டும், முள்ளுக்குறிச்சியில் அரசு ஐ.டி.ஐ., கல்லுாரி தொடங்க வேண்டும். நாமகிரிப்பேட்டையில் அரசு பாலி-டெக்னிக் கல்லுாரி துவங்க வேண்டும். நாமகிரிப்பேட்டை ஒன்-றியத்துக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்கட்ட-மைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். முள்ளுக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உடற்-கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் தங்கி பயிலும் அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ