தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வுப.வேலுார், :ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடப்பது வழக்கம். இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளிமாவட்ட வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் நடந்த ஏலத்தில் அதிகபட்சம் ஒரு கிலோ தேங்காய், 47.50 ரூபாய், குறைந்த பட்சம், 38.10 ரூபாய், சராசரி, 45.10 ரூபாய் என, 76,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில், தேங்காய் விலை உயர்ந்து, அதிகபட்சம் ஒரு கிலோ, 61.11 ரூபாய், குறைந்தபட்சம், 37.29 ரூபாய், சராசரி, 49.49 ரூபாய் என, 3,100 தேங்காய்கள், 39,000 ரூபாய்க்கு விற்பனையாகின.