உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்வெள்ளை கரும்பு விற்பனை ஜோர்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்வெள்ளை கரும்பு விற்பனை ஜோர்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்வெள்ளை கரும்பு விற்பனை ஜோர்மல்லசமுத்திரம்:காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், வெள்ளை கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில், காளிப்பட்டி கந்தசாமி கோவில் உள்ளது. இங்கு, தைப்பூச தேரோட்டவிழா நடந்து வருகிறது. கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் கூட்டம் அலைமோதும். கோவில் முன்புறம் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு கடைகள் செயல்படுகின்றன. குறிப்பாக, இங்கு விற்பனை செய்யப்படும் வெள்ளை கரும்பு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.இது குறித்து, சேலம் மாவட்டம், அரியாம்பாளையத்தை சேர்ந்த வியாபாரி முத்துசாமி, 70, கூறியதாவது; சேலம் மாவட்டம், வைகுந்தம் அருகே, அரியாம்பாளையம், கல்லேரி பகுதியில், வெள்ளை கரும்பு சில ஏக்கர் நிலப்பரப்பில் விளைவிக்கப்பட்டு, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவின்போது, விற்பனை செய்யப்படுகின்றது. ரஸ்தாளி என அழைக்கப்படும் வெள்ளை கரும்பு, தமிழகத்தின் வேறு எங்கும் கிடைப்பது மிகவும் அரிது. கந்தசாமி கோவில் திருவிழாவிற்காகவே இக்கரும்பு விளைவிக்கப்படுகிறது. கடந்த, 40 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறோம். ஒரு வெள்ளை கரும்பு ஜோடி, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுவை மிகுதி என்பதால், மக்கள் ஆவலுடன் வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை