மேலும் செய்திகள்
ஓய்வு ஆசிரியர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா
10-Mar-2025
சரக்கு ஆட்டோ மோதல்ஓய்வு பெற்ற ஆசிரியர் பலிமோகனுார்:நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் மனோகரன். இவரது மாமனார் சச்சிதானந்தம், 68. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், மருமகனுடன் வசித்து வந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகள் வழி பேரன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் பேரனை, வகுரம்பட்டியில் டியூஷன் முடித்து விட்டு, தன் மொபட்டில் சச்சிதானந்தம் அழைத்து வந்தார்.அப்போது, லத்துவாடி பஸ் ஸ்டாப் அருகே உள்ள காய்கடை அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், படுகாயமடைந்தவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நேற்று மதியம், 2:00 மணிக்கு உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-Mar-2025