உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோனாரியூர் மாரியம்மன் கோவில் விழாவைமுன்னிட்டு மாடு மாலை தாண்டும் நிகழ்வு

கோனாரியூர் மாரியம்மன் கோவில் விழாவைமுன்னிட்டு மாடு மாலை தாண்டும் நிகழ்வு

கோனாரியூர் மாரியம்மன் கோவில் விழாவைமுன்னிட்டு மாடு மாலை தாண்டும் நிகழ்வுகுளித்தலை:குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., கோனாரியூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாடு மாலை தாண்டு ம் விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.கோனாதாதா மந்தை சார்பில் நடந்த மாடு மாலை தாண்டும் விழாவில் கரூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் பகுதிகளில், 14 ஊர் மந்தைகளை சேர்ந்த மந்தையர்களுக்கு வரவேற்பும், மாடுகள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து மாலை நடைபெற்ற மாலை தாண்டும் விழாவில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த, 14 மந்தையை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. மாலை தாண்டும் நிகழ்ச்சியில் முதலில் வந்த மூன்று மாடுகளின் மேல், கன்னி பெண்கள் மூன்று பேர் மஞ்சள் பொடியை துாவி வரவேற்றனர். பின்னர் வெற்றி பெற்ற மாடு மந்தையர்களுக்கு எலுமிச்சை கனி பரிசு வழங்கப்பட்டது.இதில், இனுங்கூர் சுக்காம்பட்டியை சேர்ந்த விரிகெஜல் மந்தையை சேர்ந்த மாடு முதலாவதாக வந்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ