உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சுற்றிநடைப்பயிற்சி பூங்கா அமைக்கும் பணி விறுவிறு

சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சுற்றிநடைப்பயிற்சி பூங்கா அமைக்கும் பணி விறுவிறு

சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சுற்றிநடைப்பயிற்சி பூங்கா அமைக்கும் பணி விறுவிறுசேந்தமங்கலம்:சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைத்து, நடைப்பயிற்சி பூங்கா அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1,000 ஆண்டு பழமையான இக்கோவில் அருகே பெரிய அளவில் தெப்பக்குளம் உள்ளது. கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன் சோமேஸ்வரர் கோவில் திருவிழாவின் போது, இந்த தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடத்தப்பட்டு வந்தது. கொல்லிமலையில் மழை பெய்யும்போது, அந்த மழைநீர் தெப்பக்குளத்திற்கு வரும் வகையில் நீர்வழிப்பாதை உள்ளது.ஆனால், காலப்போக்கில் இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், குளத்திற்கு தண்ணீர் வருவது முற்றிலும் நின்றது. இதனால், தெப்பத்திருவிழா தொடர்ந்து நடத்தாமல் நிறுத்தப்பட்டதால், இந்த குளம் சேந்தமங்கலம் டவுன் பஞ், கழிவுநீர் கலக்கும் குளமாக மாறி துர்நாற்றம் வீசியது.இதையடுத்து, சில மாதங்களுக்கு முன் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரும் பணி நடந்து முடிந்தது. பின், இந்த குளத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், பக்தர்கள் பவுர்ணமி அன்று, சோமேஸ்வரருக்கு பூஜை செய்து, தீபமேற்றி வழிபட்டனர். தற்போது, குளத்தை பாதுகாக்கும் வகையில், நான்கு அடி உயரத்திற்கு கம்பி வேலி அமைக்கும் பணி நடக்கிறது. அதை தொடர்ந்து, காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள, எட்டு அடி அகலத்திற்கு, 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டு நடைபயிற்சி பூங்கா அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ