உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆற்றில் மணல் திருடிய இரு ஆட்டோ பறிமுதல்

ஆற்றில் மணல் திருடிய இரு ஆட்டோ பறிமுதல்

ப.வேலுார்: ப.வேலுார், காவிரி ஆற்று பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய, இரண்டு மினி ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ப.வேலுார் அருகே, வெங்கரை காவிரியில் கடந்த இரு தினங்க-ளுக்கு முன்பு, திருட்டு மணல் அள்ளி வந்த மினிஆட்டோவை பொதுமக்கள் பிடித்து ப.வேலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு அணிச்சம்பாளையம் காவிரியில் இருந்து, திருட்டு மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு ப.வேலுார் எஸ்.ஐ.,குமார் மற்றும் போலீசார் சென்றபோது, திருட்டு மணல் ஏற்றி வந்த மினி ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பினார். ப.வேலுார் போலீசார் இரண்டு மினி ஆட்டோக்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ