சீதாராம் யெச்சூரிக்கு நாமக்கல்லில் அஞ்சலி
சீதாராம் யெச்சூரிக்குநாமக்கல்லில் அஞ்சலிநாமக்கல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, 72, உடல்நலக்குறைவு காரணமாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில், நாமக்கல் காந்தி சிலையில் இருந்து மவுன ஊர்வலம் நடந்தது. கோட்டை சாலை, பரமத்தி சாலை, மணிக்கூண்டு வழியாக சென்ற ஊர்வலம், பூங்கா சாலையில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரியின் உருவ படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.