உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கு.பாளையத்தில் ஜல்லிக்கட்டுஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., ஆய்வு

கு.பாளையத்தில் ஜல்லிக்கட்டுஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., ஆய்வு

கு.பாளையத்தில் ஜல்லிக்கட்டுஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., ஆய்வுகுமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஆண்டுதோறும் ஜனவரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால், ஏற்பாடுகளை அமைப்பாளர் வினோத் செய்து வருகிறார். இந்நிலையில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, டி.எஸ்.பி., இமயவர்மன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணி, ஆலோசனைகள் குறித்து அறிவுரை வழங்கினர். தாசில்தார் சிவகுமார், ஆர்.ஐ., புவனேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ