வளையப்பட்டி வரைபடம் காணல ஆன்லைனில் பதிவேற்ற கோரிக்கை
வளையப்பட்டி வரைபடம் காணல ஆன்லைனில் பதிவேற்ற கோரிக்கைநாமக்கல், :நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., பார்த்திபன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதம்:பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்றக் கழகம்: மோகனுார் சர்க்கரை ஆலையில், நடப்பு அரவை பருவத்தில், கரும்பு வெட்டி ஆலைக்கு சப்ளை செய்த விவசாயிகளுக்கு, கொள்முதல் விலையை உடனடியாக வழங்க வேண்டும். சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளி மூடுவிழா காண்பதை தவிர்த்து, மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகனுார் டவுன் பஞ்சாயத்துடன் பேட்டப்பாளையம், மணப்பள்ளி, ராசிபாளையம், குமரிபாளையம் ஆகிய, 4 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அவ்வாறு இணைத்தால், விவசாய பணிகள் பாதிப்பதுடன், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பயன்பெறும் மக்கள் பாதிக்கப்படுவர்.பழனிவேல், ஒருங்கிணைப்பாளர், சிப்காட் எதிர்ப்புக்குழு: மோகனுார் தாலுகாவுக்குட்பட்ட வளையப்பட்டி குறித்த வரைபடம், ஆன்லைனில் காணவில்லை. அவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம் நீடித்தது.