உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆஞ்சநேயர் கோவில் பணியாளர்களுக்குகுடியிருப்பு கட்டுமான பணி துவக்கம்

ஆஞ்சநேயர் கோவில் பணியாளர்களுக்குகுடியிருப்பு கட்டுமான பணி துவக்கம்

நாமக்கல்:நாமக்கல் - போதுப்பட்டி சாலையில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பணியாளர்களுக்கு, 7.19 கோடி ரூபாய் மதிப்பில், 16 குடியிருப்புகள் கட்ட, அறநிலையத்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து, நாமக்கல்லில் நடந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு, கலெக்டர் உமா தலைமை வகித்தார்.நாமக்கல் மேயர் கலாநிதி, ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், கட்டுமான பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். துணை மேயர் பூபதி, கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மல்லிகா, சீனிவாசன், செல்வசீராளன், வேங்கடசுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல், கொல்லிமலை தாலுகா, வளப்பூர் நாட்டில் உள்ள அரப்பளீஸ்வரர் கோவிலில், 1.66 கோடி ரூபாயில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணியை, முதல்வர் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ