உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராஜா சுவாமி கோவிலில்கொடியேற்றத்துடன் துவங்கிய சிவராத்திரி விழா

ராஜா சுவாமி கோவிலில்கொடியேற்றத்துடன் துவங்கிய சிவராத்திரி விழா

ராஜா சுவாமி கோவிலில்கொடியேற்றத்துடன் துவங்கிய சிவராத்திரி விழாப.வேலுார்:-ப.வேலுார் அருகே, நன்செய் இடையார் ராஜா சுவாமி கோவிலில், மஹா சிவராத்திரி விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.மாசி மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ப.வேலுார் அருகே, நன்செய் இடையார் ராஜா சுவாமி கோவிலில், நேற்று கொடியேற்று விழா நடந்தது. இதில், ராஜா சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின், ராஜா சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வரும், 28 வரை, சிறப்பு பூஜை, வழிபாடு நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 27 மதியம், 1:00 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து, காவடி எடுத்து வந்து சிறப்பு பூஜை, மாலை, 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு, திருத்தேர் விழா, மயான பூஜை நடக்கிறது. 28 காலை, கொடியிறக்கம், பாலிகை வாய்க்காலில் சேர்த்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவில், திருச்சி, ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். மாசி மாத மகா சிவராத்திரி விழாவையொட்டி, திருவிழா காலங்களில் பலி பூஜை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.ஏற்பாடுகளை, பரம்பரை நிர்வாக அறங்காவலர் குழுவினர், கிருத்திகை கட்டளைக்குழு, கோவில் குடிபாட்டு மக்கள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை