உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண்களால் தான் ஆண்கள் வெற்றிபெறுகின்றனர்: அமைச்சர் மதிவேந்தன்

பெண்களால் தான் ஆண்கள் வெற்றிபெறுகின்றனர்: அமைச்சர் மதிவேந்தன்

  • நாமக்கல்:உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிருக்கு, வங்கி கடன் இணைப்பு வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், 55 பேருக்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:ஆண்களாகிய நாங்கள், வெளியில் வெற்றிகரமாக பணிகள் மேற்கொள்ள முக்கிய காரணம், வீட்டை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளும் பெண்கள் தான். பெண்களால் தான் ஆண்கள் வெற்றி பெற முடிகிறது. அத்தகைய பெண்களை போற்ற கூடிய தினமாக, ஆண்டு தோறும், மார்ச், 8ல் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.பல்வேறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, வங்கிக்கடன் இணைப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த அரசு, பொறுப்பேற்ற, மே, 2021 முதல், இதுவரை, 17 லட்சத்து, 33,696 சுய உதவிக் குழுக்களுக்கு, ஒரு லட்சத்து, 5,235.46 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.நாமக்கல் மாநகராட்சி, பழைய கால்நடை மருத்துவமனை வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள தனி டி.ஆர்.ஓ., (நில எடுப்பு) 'சிப்காட்' அலுவலகத்தை, அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். தனி டி.ஆர்.ஓ., சரவணன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ