உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வருதராஜ பெருமாள் கோவில்தேர் திருவிழா கோலாகலம்

வருதராஜ பெருமாள் கோவில்தேர் திருவிழா கோலாகலம்

வருதராஜ பெருமாள் கோவில்தேர் திருவிழா கோலாகலம்சேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில், பழமையான வருதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாசி மாத தேர் திருவிழா, கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நேற்று காலை, வருதராஜ பெருமாள், திரு‍த்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, வருதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர், முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ