உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில்குண்டம் விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில்குண்டம் விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில்குண்டம் விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்ப.வேலுார்:-ப.வேலுார் அடுத்த நன்செய் இடையாறில், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி, கடந்த, 9ல் காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. கடந்த, 16ல் மறு காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் முன் தீக்குண்டம் பற்ற வைக்கப்பட்டது. மதியம், 3:00 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்ற, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். பின், ஊர்வலமாக சென்று கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த, 62 அடி நீள குண்டத்தில் இறங்கி ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பூவாரி போட்டுக்கொண்டனர்.இன்று, கிடா வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் வேண்டி கரும்பு தொட்டில் சுமந்து அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். நாளை காலை, கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 28ல் மணிவேல் எடுத்துக்கொண்டு, ராஜா கோவிலுக்கு அழைத்து செல்லுதலுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ