உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கட்சி கொடி கம்பம் கணக்கெடுப்புடவுன் பஞ்சாயத்தில் பணி நிறைவு

கட்சி கொடி கம்பம் கணக்கெடுப்புடவுன் பஞ்சாயத்தில் பணி நிறைவு

கட்சி கொடி கம்பம் கணக்கெடுப்புடவுன் பஞ்சாயத்தில் பணி நிறைவுநாமகிரிப்பேட்டை:கட்சி கொடி கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் இப்பணி நிறைவடைந்துள்ளது. மாநில, தேசிய நெடுஞ்சாலை உள்பட பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் சுகாதார ஆய்வாளர் லோகநாதன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு பணியை தொடங்கினர். அதில், நெடுஞ்சாலை, டவுன் பஞ்சாயத்து பொது இடம், புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் இந்த பணி தீவிரமாக நடந்து வந்தது. நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.,-15, அ.தி.மு.க.,-14, பா.ஜ.,-காங்.,-த.வெ.க., தலா, 1, இதர, 18 என, மொத்தம், 50 கொடிகம்பங்கள் உள்ளதாக கணக்கெடுத்துள்ளனர். கம்பங்கள் குறித்து குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி