உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அக்னி காலபைரவருக்குதேய்பிறை சிறப்பு பூஜை

அக்னி காலபைரவருக்குதேய்பிறை சிறப்பு பூஜை

அக்னி காலபைரவருக்குதேய்பிறை சிறப்பு பூஜைநாமக்கல்,: தை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, நாமக்கல் தட்டார தெருவில் அமைந்துள்ள காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள அக்னி காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மாலை, 5:30 மணிக்கு அக்னி காலபைரவருக்கு மஞ்சள், கும்குமம், தேன், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஏலக்காய், திராட்சை, வடை, அதிரச மாலைகள் அணிவிக்கப்பட்டன.அதேபோல், உற்சவருக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு சந்தன அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.பக்தர்கள் தேங்காய், எலுமிச்சை, பூசணி ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை