ஆன்லைன் ரம்மியில் பணம்இழப்பு: வாலிபர் தற்கொலை
ஆன்லைன் ரம்மியில் பணம்இழப்பு: வாலிபர் தற்கொலைப.வேலுார்:-பரமத்தி அருகே, கீரம்பூரை சேர்ந்தவர் பழனிசாமி மகன் பிரதீப், 26; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி ஹேமலதா, 24; இருவருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. தம்பதியருக்கு, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.பிரதீப்புக்கு, 'ஆன்லைன் ரம்மி' விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், மனைவி ஹேமலதாவிடமிருந்து, இரண்டு பவுன் தங்கச்செயின், சேமிப்பு பணம் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நண்பர்களிடம் கடனாக பெற்ற பணம் ஆகியவற்றை இழந்துள்ளார். இதனால், கணவன், மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள், பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்ததால், பிரதீப் மன உளைச்சலில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, வீட்டில் பிரதீப் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.