உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாட்டுக்கோழி விலை உயர்வுஅசைவ பிரியர்கள் அதிர்ச்சி

நாட்டுக்கோழி விலை உயர்வுஅசைவ பிரியர்கள் அதிர்ச்சி

நாட்டுக்கோழி விலை உயர்வுஅசைவ பிரியர்கள் அதிர்ச்சிப.வேலுார்:-ப.வேலுார், சுல்தான்பேட்டையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி வாரச்சந்தை கூடுவது வழக்கம். அதன்படி, நேற்று கூடிய சந்தையில் பரமத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், நாட்டுக்கோழி கிலோ, 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, கிலோவுக்கு, 100 ரூபாய் கூடுதலாகி, 650 ரூபாய்க்கு விற்றதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன்று முதல் ப.வேலுார் அருகே, நன்செய் இடையார் அக்னி மாரியம்மனுக்கு திருவிழா தொடங்க இருப்பதால், சுற்று வட்டார பொதுமக்கள், வரும், 15 நாட்களுக்கு விரதம் இருக்க உள்ளனர். விரதம் இருப்பதற்கு முன், வீடுகளில் நாட்டுக்கோழி வாங்கி சமைக்க அசைவ பிரியர்கள் விரும்பியதால் நாட்டுக்கோழி விலை கணிசமாக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ