உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பறவை அவதானிப்பு செய்தலுக்கான ஆயத்த பயிற்சி

பறவை அவதானிப்பு செய்தலுக்கான ஆயத்த பயிற்சி

பறவை அவதானிப்பு செய்தலுக்கான ஆயத்த பயிற்சிநாமக்கல்:நாமக்கல், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கம், சேலம் இயற்கையியல் கழகம் சார்பில், ஆசிரியர்களுக்கான, 'பறவை அவதானிப்பு' செய்தலுக்கான ஆயத்த பயிற்சி முகாம், நேற்று நடந்தது. நிறுவன விரிவுரையாளர் தேவராசு வரவேற்றார். நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்க தலைவர் பிரபாகரன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். நாமக்கல், மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:பறவைகள் உற்றுநோக்கலின் போது, சுற்றுச்சூழல் வளமாக உள்ளதா என தெரிந்துகொள்ள முடியும். பறவைகளே பழங்களை தின்று, விதைகளை வேறொரு இடத்தில் போடுவதால், மரங்கள் உருவாகின்றன. பறவைகள் அவதானித்தலுக்கு தொலைநோக்கி, பறவைகள் பற்றிய பாக்கெட் கைடு, ஈ-பேர்ட் செயலியில், ஆசிரியர்கள் பதிவு செய்து, பறவைகள் பற்றிய தரவுகளை உள்ளீடு செய்யும்போது, பறவையியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள், இயற்கை பாதுகாவலர்கள் போன்வறர்களுக்கு, நம்மிடத்தில் உள்ள பறவைகள், அவற்றின் எண்ணிக்கை, பரவியுள்ள இடங்கள், பறவைகள் வலசை போதல் பற்றி அறிய உதவுகின்றன. ஆசிரியர்கள் பறவைகள் அவதானிப்பு செய்யும்போது மக்கள் விஞ்ஞானிகளாக மாறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.சேலம், பாகல்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருளானந்தம், ஆசிரியர்கள், பறவைகளை நோக்குவதற்கான குறைந்த செலவிலான தொலை நோக்கியை செய்வதற்கு பயிற்சியளித்தனர். சேலம் இயற்கையியல் கழகத்தின் பாம்புகள் ஆராய்ச்சியாளர் முருகேசன், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பறவைகளை, ஆசிரியர்கள் எளிதாக அடையாளம் காணுவதற்கும், எளிதாக எடுத்து செல்வதற்கும் உகந்த பறவைகள் சார்ந்த வண்ண புகைப்படங்களும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பறவைகளின் பெயர்கள் கொண்ட பாக்கெட் கைடு வழங்கினார்.மேலும், ஆசிரியர்கள், 'ஈபேர்ட்' செயலியில் பதிவு செய்தல், உற்றுநோக்கிய பறவைகளையும், அவற்றின் எண்ணிக்கை, வாழிடம், உற்றுநோக்கிய இடம், தேதி, நேரம் போன்றவற்றை ஈபேர்ட் செயலியில் பதிவு செய்வது குறித்து, சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றியம், தாசநாயக்கன்பாளையம் பஞ்., தொடக்கப்பள்ளி ஆசிரியர் பாக்கியலட்சுமி விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை