நாளை பிரதமரின் இன்டர்ன்ஷிப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
நாளை பிரதமரின் இன்டர்ன்ஷிப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்கரூர்:பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில், விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சி' என்ற புதிய திட்டத்தில், தனியார் நிறுவனங்களில், 12 மாத கட்டணமில்லா பயிற்சியும், அதில் சேரும் இளைஞர்களுக்கு மாதம், 5,000 ரூபாய்- ஊக்கத்தொகை மற்றும் தற்செயலான செலவுகளுக்கு, 6,000 ரூபாய் ஒருமுறை வழங்கப்படுகிறது. இதில், கரூர் மாவட்டத்தில், 9 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 44 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில், 10 -ம் வகுப்பு கல்வித் தகுதியில் நான்கு பேர், பிளஸ் 2 கல்வி தகுதியில் ஆறு பேர், டிப்ளமோ கல்வி தகுதியில் நான்கு பேர், பட்டப்படிப்பு முடித்த, 15 இளைஞர்கள் மற்றும் ஐ.டி.ஐ., பயிற்சி பெற்ற, 15 இளைஞர்களுக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தில், 21 முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சிக்கு pminternship.mca.gov.inஎன்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளை (31ம் தேதி) கடைசி நாளாகும். மேலும் விபரங்களுக்கு, 04324 299422, 8248112815, 95669 92442 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.