உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பழைய இடத்திலேயே பஞ்., ஆபீஸ் செயல்பட மனு

பழைய இடத்திலேயே பஞ்., ஆபீஸ் செயல்பட மனு

பழைய இடத்திலேயே பஞ்., ஆபீஸ் செயல்பட மனுநாமக்கல்:சிங்கிலிப்பட்டி பஞ்., பொதுமக்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிங்கிலிப்பட்டி கிராம பஞ்.,ல், 1,000 மக்களுக்கு மேல் வசித்து வருகிறோம். 30 ஆண்டுகளுக்கு மேல், சிங்கிலிப்பட்டி மாரியம்மன் கோவில் எதிரே பஞ்., அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே, ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், வி.ஏ.ஓ., அலுவலகம், பஞ்., தொடக்கப்பள்ளி உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, ௨ கி.மீ., துாரத்திற்கு, புதிய பஞ்., அலுவலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவ்வாறு அமைந்தால், மக்கள் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பகுதிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். கிராம மக்கள் பஞ்., அலுவலகம் வருவதை வரவேற்கிறோம். ஆனால், தொலைவில் இருப்பதை தான் எதிர்க்கிறோம். தற்போது உள்ள அலுவலகம் அருகே, நத்தம் புறம்போக்கு கொண்ட பொது இடம் உள்ளது. அதில், இ-சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. அதனால், புதிய கட்டடத்தை இங்கு அமைப்பது அனைத்து தரப்பினருக்கும் வசதியாக இருக்கும். அவற்றை கருத்தில் கொண்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி திட்டத்தை தொடங்க வேண்டும். தொடர்ந்து அதே இடத்தில் பஞ்., அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை