உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிழக்கு கரை வாய்க்காலை முழுமையாகபுதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கிழக்கு கரை வாய்க்காலை முழுமையாகபுதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கிழக்கு கரை வாய்க்காலை முழுமையாகபுதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் பகுதியில் செல்லும், மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலை முழுமையாக புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 10 கி.மீ., துாரத்திற்கு மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் செல்கிறது. பள்ளிப்பாளையம் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், பாசனத்திற்கு தண்ணீர் வரும் போது, நெல் சாகுபடியில் ஈடுபவர். 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதியில் உள்ள வாய்க்கால், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், வாய்க்கால் கரைகள் இடிந்து விழுந்து, மண் கரையாக மாறியுள்ளது. வாய்க்காலில் பெரும்பாலான இடங்களில் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், நீர் விரயம் காரணமாக விளை நிலங்களின் கடைமடை பகுதிக்கும் போதியளவு தண்ணீர் சென்று சேர்வதில்லை.இது குறித்து, மோளகவுண்டம்பாளையம் விவசாயி பன்னீர் செல்வம் கூறுகையில்,'' வாய்க்காலில் தண்ணீர் திறக்கும்போது தான், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வர். வாய்க்கால் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், பாசனத்திற்கு போதுமான தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, வாய்க்காலை முழுமையாக புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி