மேலும் செய்திகள்
குளிர்வித்த சாரல் மழையால் மகிழ்ச்சி
13-Mar-2025
மழையால் தணிந்த வெயில் தாக்கம்மாவட்டத்தில் 191.50 மி.மீ., பதிவுநாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம், 191.50 மி.மீ., மழை பெய்தது. இந்த மழையால், வெயிலின் தாக்கம் தணிந்தது.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். நேற்று முன்தினம், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, சாரல் மழை பெய்தது. ஒரு சில இடங்களில், கன மழையும் பெய்தது. ஒரே நாளில், 191.50 மி.மீ., மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதியடைந்தனர். நேற்று முன்தினம் காலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,ல்): குமாரபாளையம், 22.60, மங்களபுரம், 22.60, மோகனுார், 2, நாமக்கல், 15, ப.வேலுார், 4, புதுச்சத்திரம், 22, ராசிபுரம், 21.80, சேந்தமங்கலம், 18, திருச்செங்கோடு, 22, கலெக்டர் அலுவலகம், 11.50, கொல்லிமலை, 30 என, மொத்தம், 191.50 மி.மீ., மழை பெய்துள்ளது.இதற்கிடையில், நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், மழை பெய்தது. குறிப்பாக, நாமக்கல் நகரம், கலெக்டர் அலுவலகம் பகுதி, மோகனுார் உள்பட பல்வேறு இடங்களில், லேசான மற்றும் கனமழை பெய்தது. இந்த மழை, அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை நீடித்தது.
13-Mar-2025